இந்தப் பயணத்தின் முடிவுதான் என்ன?

விக்டர் ஐவன்

தமிழில்: ராஃபி சரிப்தீன்

சிங்கப்பூரின் வெளிநாட்டு அமைச்சரான விவ்யன் பாலகிரு~;ணன் தற்போதைய அனர்த்த நிலைக்கு முகம் கொடுப்பதற்கான தனது நாட்டின் ஏற்பாடுகள் குறித்து விளக்கமளிக்கும் வகையிலான வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. அது போன்றதொரு கருத்துச் செறிவுள்ள உரைகள் எமது நாட்டின் அரசியல்வாதிகளிடம் கேட்கவே முடியாது என்ற அளவில் அவரது உரை மிகவும் சிறப்பான முறையில் அமைந்திருந்தது.

2015ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு அமைச்சராக கடமை புரிகின்ற இவர் குறித்து நான் குறிப்பிடுவதற்கு ஒரு காரணம் இருக்கின்றது. அவர் ஒரு ஃபிஜி இனத்தவராக கருதப்பட்ட போதிலும் அஜித் கனகசுந்தரம் என்பவரது “දෙරටක කතාන්දරය” (இரண்டு நாடுகளின் கதை) எனும் நூலில் அவர் இலங்கையின் குடும்பப் பின்னணியுள்ள ஒருவாராக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றார்.

கனகசுந்தரம் என்பவரால் எழுதப்பட்ட குறித்த புத்தகமானது இலங்கை- சிங்கப்பூர் குறித்து எழுதப்பட்ட மிகச் சிறந்ததொரு புத்தகமாகும். இலங்கைத் தமிழர்கள் தாம் இரண்டாம் தரமாக கருதப்பட்டதன் காரணமாக ஒவ்வொருவரும் சிறிய சிறிய குழுக்களாக நாட்டை விட்டு வெளியேறிச் சென்றபோது அவர்களில் சிறந்த சிந்தனையாளர்களை லீகுவான்யூ தனது நாட்டை அபிவிருத்தி செய்துகொள்ளப் பயன்படுத்திக் கொண்ட விதம் குறித்து அந்த நூலின் 8வது அத்தியாயத்தில் குறிப்பிடப்படுகின்றது.

இரண்டாம் தரமாக கருதப்பட்டதனால் முதலாவதாக நாட்டைத் துறந்து போன இனமாக பறங்கியர்; இனம் கருதப்படுகின்றது. நாடோடி இனம் அல்லது கரப்பான் இனம் என்பதாக அவர்களை நாம் அடையாளப்படுத்துகின்றோம். இலங்கை அவர்களுக்கு பொருத்தமான நாடல்ல என்பதனை அவர்கள் புரிந்து கொண்டதும் அவர்கள் தாமாகவே நாட்டை விட்டு வெளியேறிச் சென்று விட்டனர்.

சுதந்திரம் மற்றும் லிபரல் முறை என்பவற்றை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியவர்கள் பறங்கியர்களாவர். இலங்கையர் என்ற இனத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதாக கருத்து முன்வைத்த முதலாவது இனத்தவர்களும் அவர்களே. அவர்களில் சிறந்த திறமைசாலிகள் பலர் காணப்பட்டனர். இலகுவாக மீட்டிப் பார்க்க முடியுமான அவர்கள் குறித்த பெயர்கள் சிலவற்றை இங்கு தருகின்றேன்.

டேவிட் பேன்டர், ஜோர்ஜ் கீட், பேராசிரியர் லுடோவின், லயனல் வென்ட்டி, ஜெப்ரி பாவா, மைக்கல் ஒன்டச்சி, பாபரா சன்னோசி, டன்கன் வைட், எசலி டிவோ~;, மைக்கல் ரொபடிஸ், கர் முல்லர் என்பவர்கள் அவர்களில் பிரதானமானவர்களாவர்.

சிங்களவர்களாகிய எமது அடுத்த எதிரிகளாக தமிழர்கள் நோக்கப்பட்டனர். இலங்கையில் வளர்ந்து வந்த இனவாத சிந்தனைகளின் முன்னால் இலங்கையில் தமக்கு எவ்விதமான எதிர்காலமும் இருக்கப் போவதில்லை என அறிந்து கொண்ட சிலர் முன்னதாக இலங்கையை விட்டு வேறு நாடுகளுக்கு சென்று விட்டனர். சிங்கள அரச மொழிக் கொள்கை அமுலுக்கு வந்ததன் பின்னர் இன்னுமொரு குழுவினர் நட்டை விட்டு செல்லலாயினர். அதன் பின்னர் 83ஆம் ஆண்டு கருப்பு ஜூலையின் பின்னர் இந்தப் புலம்பெயர்வு பாரிய அடிப்படையில் நடைபெறத் துவங்கியது.

இவ்வாறு நட்டைத் துறந்து சென்ற தமிழர்களில் திறமையானவர்களாகக் கருதப்பட்டவர்களை சிங்கப்பூரைக் கட்டியெழுப்புவதற்காக லீகுவான்யூ பயன்படுத்திக் கொண்டார். ஒரு நாடு என்ற வகையில் சிங்கப்பூரை கட்டியெழுப்புவதற்காக எங்களால் வெறுத்தொதுக்கப்பட்ட தமிழர்களினது பங்களிப்பு மிகப் பாரியதாக அமைந்திருந்தது. அஜித் கனகசுந்தரத்தின் புத்தகத்தில் குறிப்பிடப்படுகின்றவர்களில் சிலரினது தகவல்களை கீழே தருகின்றேன்.

எஸ். ராஜரத்னம் லிகுவான்யூவிடம் மிக நெருங்கியவராக இருந்து வந்தார். நீண்ட காலமாக வெளிநாட்டு அமைச்சராக செயல்பட்டார். ஒவ்வொரு நாளின் ஆரம்பத்திலும் பாடசாலை மாணவர்களினால் உரத்த குரலில் சொல்லப்படுகின்ற தேசியக் கொள்கையினை எழுதியவரும் அவராவார். இன்னுமொரு யாழ்ப்பாணத் தமிழரான தாரமன் சண்முகரத்ணம் பிரதி பிரதமராகவும் அனைத்து கருமங்கள் தொடர்பிலான பிரதானியாகவும் செயலாற்றியிருக்கின்றார்.

நிர்வாகத் துறையில் பலமானவராக இருந்த ஒருவராக ஜே.வை.எம். பிள்ளை என்பவரைக் குறிப்பிடலாம். அவரே சிங்கப்பூர் விமான சேவையின் ஸ்தாபகரும் முதலாவது தலைவருமாவார். அத்துடன் நிதி அமைச்சரின் செயலாளராகவும் பணியாற்றியிருக்கின்றார். தன்னிடமிருந்த சிறந்த வினைத்திறனும் உற்சாகமும் கொண்ட ஓர் அரச ஊழியர் என லீகுவான்யூ இவர் குறித்து சிலாகித்துக்; குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரின் உச்ச நீதிமன்றத்தில் இலங்கைத் தமிழர்கள் நால்வர் பணியாற்றியிருக்கின்றனர். நீதிபதி சின்னத்துரை, நீதிபதி ஏ.பீ. ராஜா (பிற்காலத்தில் லண்டன் உயர் ஆணையாளராக பணியாற்றினார்), நீதிபதி குலேந்திரன் (உச்ச நீதிமன்றத்தின் சிரே~;ட நீதிபதி) ஆகியோர் குறிப்பிடத்தக்கோர் ஆவர்.

சுகாதாரத் துறையின் மேம்பாட்டில் பங்களிப்புச் செய்த இலங்கையர்களில் பரிசோதனைக் குழாய் குழந்தை செயற்பாட்டினை ஆரம்பித்து வைத்தவரான எஸ்.எஸ். ரத்ணம், விவசாய இரசாயனத் துறை மற்றும் பொது சுகாதார் துறையில் பேராசியரியரும் விஞ்ஞானியுமான ஜயராஜ் ஜெயரத்ணம், உலக வைத்தியர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த அருள்குமார், முன்னணி நரம்பியல் வைத்திய நிபுணர் சுவேந்திரன் ஆகியோரும் பிரதானமானவர்கள்.

வங்கித் துறையிலும் சிறந்த பங்களிப்பை இலங்கைத் தமிழர்கள் சிங்கப்பூருக்கு வழங்கியிருக்கின்றனர். அவர்களில் சிங்கப்பூர் அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஜே.வை.எம். பிள்ளை, ஓ.சீ.பீ.சீ யின் பணிப்பாளர் குலாமின் செயலாளராக பணியாற்றிய அலன் பத்மராஜா, சிட்டி பேங்க் வலையமைப்பினை உலகளாவிய ரீதியில் செயல்படுத்துவதற்காக தொழிநுட்ப மத்திய நிலையம் ஒன்றினை அமைத்த அஜித் கனகசுந்தரம் ஆகியோர் இதில் பிரதானமானவர்களாவர்.

இலங்கையின் சிறுபான்மையினர் குறித்து பின்பற்றப்பட்ட கொள்கைகள் காரணமாக இலங்கை அபிவிருத்தி அடைவதற்காக இருந்த வாய்ப்புக்களை இழக்கச் செய்திருக்கின்றது. சிறந்த சிந்தனையாளர்களை இலங்கை இழந்துவிட நேர்நதிருக்கின்றது. சிங்கப்பூரின் முன்னேற்றத்தில் தேசிய ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாடு என்பன பிரதான பங்காற்றியிருக்கின்றன.

பறங்கியர்கள் இங்கு இருக்கக்கூடாது என்பதாகக் கூறி முதலாவது சுற்றில் நாம் அவர்களை விரட்டியத்து விட்டோம். இரண்டாவது சுற்றில் தமிழர்களை விரட்டியடித்து விட்டோம். தற்போது மூன்றாவது சுற்றாக முஸ்லிம்கள் தொடர்பிலும் அதே போன்றதொரு கொள்கை பின்பற்றப்படுகின்றது. அதன் பின்னர் எந்த இனத்தவர்? இந்தப் பயணத்தின் முடிவு தான் என்ன?

விக்டர் ஐவனின் முகநூலில் இருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *